18 දෙසැ 2017

கல்வி அமைச்சில் சேவையைப் பெற்றுத்தருவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றவர்களை நீதியின் முன்நிறுத்த விசேட வேலைத்திட்டம்.

මුද්‍රණය

25398276 10156120793329060 8343964932112910057 o

பொது மக்கள் தினத்தன்று கல்வி அமைச்சுக்கு வருகின்ற மக்களை ஏமாற்றும் விதமாக அதிகாரிகளை சந்திப்பதற்கு அவகாசம் பெற்றுத்தருவதாக கூறியும் அரசு வேலைகளைச் செய்து தருவதாக கூறியும் இலஞ்சம் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட நபரொருவர் பற்றிய முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறான நபரை உடனடியாக நீதியின் முன் நிறுத்துவதற்கு புலனாய்வு அதிகாரிகளும், பொலிஸ் அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் என கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார். 
 
 
இலஞ்ச ஊழலற்ற கல்வி அமைச்சாக அமைப்பதற்கு முழுமையான நடவடிக்கையினை; மேற்கொள்வதாகவும் அமைச்சின் அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
 
Twitter